
தமிழகத்தில் 10, 11ம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் தேர்வின்றி தேர்ச்சி – முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு!
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
துணைத்தேர்வுகள்:
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் 10,11 மற்றும்12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. பின்னர், அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. மேலும், பொதுத்தேர்வு மாணவர்களுக்கு உள்மதிப்பீடு முறையில் அரசு மதிப்பெண்களை வழங்க முடிவு செய்து, அதன்படி, கடந்த மாதம் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அரசு வழங்கிய மதிப்பெண்களின் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு மீண்டும் துணைத்தேர்வுகளில் வாய்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
‘இந்த வீட்ல எதையுமே சுதந்திரமா பேச முடியாது போல இருக்கே’ உலகநாயகனின் கிண்டல் – பிக்பாஸ் 5 ப்ரோமோ!
10 மற்றும் 11ம் வகுப்பில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுத துணைத்தேர்விற்கு விண்ணப்பித்திருந்தனர். 2021 ம் ஆண்டின் 10, 11ம் வகுப்பு துணைத்தேர்விற்கான தேர்வுமைய நுழைவு சீட்டு கடந்த செப்டம்பர் 8ம் தேதி அன்று காலை 11 மணிக்கு அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. துணைத்தேர்வர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் செப்டம்பர் 13 மற்றும் 14ம் தேதிகளில் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழக அரசு புதிய வெளியிட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதன்படி, செப்டம்பர் 2021-ல் நடைபெறவுள்ள 10 மற்றும் 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், தனித்தேர்வர்களாக விண்ணப்பித்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரபூர்வ அறிக்கையினை வெளியிட்டுள்ளது.