திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்வோர் கவனத்திற்கு – தரிசன சேவைகள் ரத்து!

0

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்வோர் கவனத்திற்கு – தரிசன சேவைகள் ரத்து!

திருப்பதியில் நேற்று 76,324 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மேலும் 38,710 பேர் முடி காணிக்கை 38,710 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி:

திருப்பதியில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து தினசரி முன்பதிவு அடிப்படையில் கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இலவச தரிசன டிக்கெட் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 10,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் மீண்டும் அனைத்து பூஜைகளுக்கு பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் திட்டமிட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது பக்தர்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அன்னையர் தினத்தில் மகன் போட்டோவை முதல் முறையாக வெளியிட்ட காஜல் – வைரலாகும் போட்டோ!

மாதந்தோறும் கோயில் இணையதளம் மூலம் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது திருப்பதியில் தினமும் 50,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து திருப்பதியில் பக்தர்களை அதிக அளவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோடை விடுமுறையையொட்டி மேலும் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.

மேலும் தற்காலிகமாக வாராந்திர சேவைகளை ரத்து செய்ய திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே விசேஷ பூஜை, சகஸ்கர கலசாபிஷேகம், வசந்த உற்சவம், ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அஷ்டதள பாத பத்மாராதனை, திருப்பாவாடை மற்றும் நிஜபாத தரிசன ஆர்ஜித சேவைகளும் விரைவில் தற்காலிகமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று 76,324 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 38,710 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.73 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here