தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு இந்த விதிமுறைகள் கட்டாயம் – அதிரடி அறிவிப்பு!!

0
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு இந்த விதிமுறைகள் கட்டாயம் - அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு இந்த விதிமுறைகள் கட்டாயம் - அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு இந்த விதிமுறைகள் கட்டாயம் – அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகையானது வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு தீயணைப்புத்துறை சில விதிமுறைகளை குறித்த சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தீபாவளி

தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பட்டாசு கடைகளில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க சில விதிமுறைகளை தீயணைப்பு துறை இயக்குனர் தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சட்டப்படி பட்டாசு கடையானது கல் மற்றும் கான்கிரீட் கட்டிடமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதே போல் கடைக்குள் செல்லவும், கடையை விட்டு வெளியேறவும் என இரு புறங்களிலும் வழிகள் இருக்க வேண்டும். அத்துடன் பட்டாசு கடைகளில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும் பட்டாசு கடை அமைப்பதற்கு காவல்துறை, தீயணைப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகம் ஆகியோரிடம் இருந்து சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பட்டாசு கடைகளில் பட்டாசுகளை தவிர மற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் தரை தளத்தில் மட்டுமே பட்டாசு கடை அமைக்க வேண்டும் இதையடுத்து படிக்கட்டுகள், லிப்ட் உள்ளிட்டவை அருகில் பட்டாசுகளை வைக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ATM ல் பணம் எடுக்க போறீங்களா?- அப்போ இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க!

Exams Daily Mobile App Download

மேலும் திருமண மண்டபம், அடுக்குமாடி குடியிருப்புகள், அரங்குகள் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு கடைகளை அமைக்க தடை என்றும் பட்டாசு வைத்திருக்கும் அறையானது குறைந்தபட்சமாக 9 சதுர மீட்டர் முதல் அதற்கும் மேல் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறையானது அதிகபட்சமாக 25 சதுர மீட்டர் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஒரு பட்டாசு கடைக்கும், மற்றொரு பட்டாசு கடைக்கும் இடையில் குறைந்தபட்சமாக 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் உள்ளிட்ட 30 விதிமுறைகளை தீயணைப்பு துறையானது வகுத்துள்ளது. அத்துடன் இந்த விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசு கடை அமைக்க அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!