‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் பொங்கலுக்கு பிறகு நடக்கப்போகும் ட்விஸ்ட் – ரசிகர்கள் ஷாக்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் பொங்கலுக்கு பிறகு நடக்கப்போகும் ட்விஸ்ட் - ரசிகர்கள் ஷாக்!
பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் பொங்கலுக்கு பிறகு நடக்கப்போகும் ட்விஸ்ட் - ரசிகர்கள் ஷாக்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் பொங்கலுக்கு பிறகு நடக்கப்போகும் ட்விஸ்ட் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் வர இருக்கிறது. முல்லையின் தோழியாக ஒருவர் என்ட்ரி கொடுக்க இருக்கும் நிலையில் அதனால் கதிர் முல்லை இடையே பிரிவு ஏற்பட இருப்பது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ:

கூட்டு குடும்பம் என்றாலே அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் அண்ணன் தம்பிகளை போலவே இருக்க வேண்டும் என சொல்லும் அளவிற்கு விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் இடத்தில் பிரபலமாக இருக்கிறது. இந்த சீரியலில் தினசரி குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகள், சண்டைகள், காதல் காட்சிகள் போன்றவை காட்டப்படுவதால் குடும்ப ரசிகர்களை கவர்ந்துள்ளது. கண்ணனை மீண்டும் வீட்டிற்குள் சேர்ந்து கொண்டதற்கு பின் சீரியலில் சுப நிகழ்ச்சிகளை மட்டுமே காட்டி வருகின்றனர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினியின் ரீஎன்ட்ரி – ரசிகர்கள் உற்சாகம்!

மேலும் புதிய மருமகளாக வந்த ஐஸ்வர்யாவால் குடும்பத்தில் ஏற்படும் மன கசப்புகளை அழகான கதை உடன் இந்த சீரியல் எடுத்து செல்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் கதிர் முல்லை காதல் காட்சிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலில் விழுந்த அழகை பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைவார்கள், தற்போது இருவரும் குழந்தை வேண்டும் என நினைக்க அது நடக்காமல் போவது போல காட்டப்படுகிறது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இறுதிச்சுற்றில் புறக்கணிக்கப்பட்ட ஆரி – ரசிகர்கள் அதிர்ச்சி!

தற்போது முல்லையின் தோழி கதாபாத்திரம் அறிமுகம் செய்ய இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதனால் கதிர் முல்லை இடையே பிரச்சனை வர இருப்பது போலவே கதிரால் அதை தாங்க முடியாமல் தண்ணீ அடிப்பது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதனால் இனி வரும் வாரங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிரடி மாற்றங்கள் வர இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here