‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினியின் ரீஎன்ட்ரி – ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகிய ரோஷினியின் ரீஎன்ட்ரி - ரசிகர்கள் உற்சாகம்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகிய ரோஷினியின் ரீஎன்ட்ரி - ரசிகர்கள் உற்சாகம்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினியின் ரீஎன்ட்ரி – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் கதாநாயகியாக கண்ணம்மா கேரக்டரில் நடித்த ரோஷினி ஹரிபிரியன் சீரியலில் இருந்து விலகிய நிலையில் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

நடிகை ரோஷினி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தெலுங்கில் கார்த்திகை தீபம் என்ற சீரியலின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த சீரியல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியல் கண்ணம்மா கேரக்டர் சீரியலில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. கோர்ட்டின் ஆணைக்கிணங்க பாரதியும் கண்ணம்மாவும் ஒரே வீட்டில் 6 மாத காலம் வாழ சம்மதித்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் ஒன்று சேருவர்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

அண்மையில் இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்த நடிகை ரோஷினி சீரியலில் இருந்து விலகியுள்ளார். இவர் விலக்கியதற்கு அவர் தரப்பில் இருந்து இதுவரை சரியான காரணம் தெரிவிக்கவில்லை. பட வாய்ப்புகள் கிடைத்ததால் விலகியுள்ளார் என்றும் பல்வேறு கரணங்கள் கூறப்பட்டு வந்தது. அவருக்கு பதிலாக தோற்ற சாயலில் இவர் போலவே உள்ள டிக்டாக் பிரபலம் வினுஷா பாரதி கண்ணம்மாவில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் விஜய் டிவிக்கு ரோஷினி ஹரிப்ரியன் வரவிருப்பதாக தகவல் வெளியானது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இறுதிச்சுற்றில் புறக்கணிக்கப்பட்ட ஆரி – ரசிகர்கள் அதிர்ச்சி!

தற்போது விஜய் டிவியில் அனைவரும் பிடித்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3-க்கான ப்ரோமோ வெளியானது. இந்த ப்ரோமோவில் கோமாளிகளாக சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா போன்றவர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் நடிகை ரோஷினி குக்காக கலந்து கொள்வது போல் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. அதனால் இவர் மீண்டும் விஜய் டிவிக்கு வந்துள்ளது உறுதி ஆகி உள்ளது. இதற்காக தன இவர் சீரியலில் இருந்து விலகி உள்ளரா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here