விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இறுதிச்சுற்றில் புறக்கணிக்கப்பட்ட ஆரி – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 இறுதிச்சுற்றில் புறக்கணிக்கப்பட்ட ஆரி - ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 இறுதிச்சுற்றில் புறக்கணிக்கப்பட்ட ஆரி - ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இறுதிச்சுற்றில் புறக்கணிக்கப்பட்ட ஆரி – ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியின் இறுதி சுற்று இன்று நடைபெற இருக்கிறது. அதில் கடந்த சீசன் டைட்டில் வின்னர் ஆரி கலந்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அது குறித்து தகவல் ஒன்றை ஆரி வெளியிட்டு இருக்கிறார்.

பிக்பாஸ் வின்னர் ஆரி:

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக தொடங்கப்பட்டு தற்போது இறுதி சுற்றை நெருங்கி இருக்கிறது. தற்போது 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டின் இருக்கின்றனர். இன்றைய எபிசோடில் பிரமாண்ட மேடையில் கமல் அவர்களின் முன்னிலையில் இதுவரை 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடி இறுதி சுற்றில் இருக்கும் ஐந்து பேரில் ஒருவர் வெற்றி மகுடத்தை சூட இருக்கிறார். ராஜு, பிரியங்கா, நிரூப், அமீர், பாவ்னி என ஐந்து பேரில் ஒருவருக்கு தான் பிக்பாஸ் வின்னர் டைட்டில் கொடுக்கப்படும்.

இந்நிலையில் பிக்பாஸ் கடந்த சீசன்களில் இறுதி சுற்றில் முந்தைய சீசனில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் வருவார்கள். அந்த வகையில் நான்காவது சீசனில் வெற்றி பெற்ற ஆரி வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாடியது முதல் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இன்று நடைபெறும் இறுதி சுற்றில் ஆரியை பார்க்க ஆவலுடன் இருந்தனர். இது குறித்து ஆரி வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Reliance Jio பயனர்களுக்கு சூப்பர் ஆபர் – தினசரி 2.5 ஜிபி டேட்டாவுடன் ஒரு ஆண்டு வேலிடிட்டி! முழு விபரம்!

அவர் வெளியிட்ட பதிவில், நான் இந்த சீசனில் பிக்பாஸ் இறுதி சுற்றிற்கு வர வேண்டும் என ஆவலுடன் இருந்தேன் ஆனால் என்னை இதுவரை யாரும் அழைக்கவில்லை அதனால் இன்றைய எபிசோடில் நான் வரமாட்டேன் என ஆரி தனது ரசிகர்களுக்கு விளக்கம் அளித்து இருக்கிறார். இந்நிலையில் ஆரியின் பதிவை பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும் இந்த சீசன் வெற்றியாளர் குறித்த தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here