நடிகர் சிம்புவை காதலிக்கும் ஸ்ரீநிதி சொன்ன அதிர்ச்சி தகவல் – வைரலாகும் பதிவு!

0
நடிகர் சிம்புவை காதலிக்கும் ஸ்ரீநிதி சொன்ன அதிர்ச்சி தகவல் - வைரலாகும் பதிவு!
நடிகர் சிம்புவை காதலிக்கும் ஸ்ரீநிதி சொன்ன அதிர்ச்சி தகவல் - வைரலாகும் பதிவு!
நடிகர் சிம்புவை காதலிக்கும் ஸ்ரீநிதி சொன்ன அதிர்ச்சி தகவல் – வைரலாகும் பதிவு!

ஜீ தமிழில் யாரடி நீ மோஹினி சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி. அவர் சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளை கிளப்பும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ஒரு சேனல் நிர்வாகம் தன்னிடம் தவறாக அணுகியதாக பகிர் குற்றசாட்டு ஒன்றை அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரீநிதி:

சின்னத்திரை சீரியல்கள் எந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்து இருக்கிறதோ அந்த அளவிற்கு அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் 7C சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீநிதி. அதன் பின் அவர் ஜீ தமிழில் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோஹினி சீரியலில் நடித்து பிரபலமானார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீநிதி பல யூடுப் சேனல்களில் பேட்டி கொடுத்திருக்கிறார்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் வலிமை படத்தை பற்றி அவர் சொன்ன கருத்து ஒன்றின் மூலம் சமூக வலைதளங்களில் அதிகம் பேசும் பொருளாக மாறினார். அதன் மூலம் ஏகப்பட்ட சர்ச்சைகள் வந்த நிலையில் அவர் அதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் பின் பல சர்ச்சைக்குரிய வீடியோக்களை அவர் பதிவிட்டார். அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக அவருடைய அம்மா விளக்கம் கொடுத்தாலும் வாரம் வாரம் புது புது சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்.

நடிகை நட்சத்திரா குடும்பத்தில் மீண்டும் பிரச்சனையா? தோழி ஸ்ரீநிதி உடைத்த ரகசியம்!

சென்ற வாரம் நடிகை நட்சத்திரா பற்றி ஒரு சர்ச்சையான வீடியோ வெளியிட்டு இருந்தார். அதன் பின் சிம்புவை திருமணம் செய்ய வேண்டும் என சிம்பு வீட்டு வாசலில் தர்ணா செய்து இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் ஒரு சேனல் ஹெட் ஒரு ஷோ பற்றி பேச வேண்டும் என்று என்னிடம் போன் செய்து ஆபிசுக்கு வர சொன்னார். நான் சென்ற போது அது ஆபீஸ் மாதிரி இல்லை. பார்ப்பதற்கு வீடு மாதிரி இருந்தது. அதன் பின் அந்த சேனலின் ஹெட் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். தனியா கூப்பிட்டு மடியில் உட்கார சொன்னதாக பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!