திருமணத்திற்கு பின் முதன் முதலாக நடிகர் சித்து & நடிகை ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படம் – இணையத்தில் வைரல்!

0
திருமணத்திற்கு பின் முதன் முதலாக நடிகர் சித்து & நடிகை ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படம் - இணையத்தில் வைரல்!
திருமணத்திற்கு பின் முதன் முதலாக நடிகர் சித்து & நடிகை ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படம் - இணையத்தில் வைரல்!
திருமணத்திற்கு பின் முதன் முதலாக நடிகர் சித்து & நடிகை ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படம் – இணையத்தில் வைரல்!

சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு மண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துள்ள நடிகர் சித்து மற்றும் நடிகை ஸ்ரேயா இருவரும் திருமணத்திற்கு பின்பு முதன் முதலாக வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

நடிகர் சித்து

தமிழ் சின்னத்திரை உலகில் கடைசியாக நடைபெற்று முடிந்துள்ள நடிகர் சித்து மற்றும் நடிகை ஸ்ரேயாவின் காதல் திருமணம் இன்று வரையிலும் பேசப்பட்டு வருகிறது. கலர்ஸ் தமிழ் டிவியின் ‘திருமணம்’ என்ற சீரியல் மூலமாக தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான இவர்கள் இருவரும் தற்போது திருமண பந்தத்தின் மூலம் ஒன்றாக இணைந்துள்ளனர். மலையாள பெண்ணான நடிகை ஸ்ரேயா, நடிகர் சித்துவிடம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் நட்பாக பழகி வர இந்த உறவு நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தில் 40 காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே..!

இப்படியே பல நாட்களாக பயணித்து வந்த இவர்களின் ரகசிய காதல் விரைவிலேயே வெளிச்சத்துக்கு வந்தது. இதை தொடர்ந்து இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், இருவரும் தங்களது வேளைகளில் கவனம் செலுத்த துவங்கினார்கள். அந்த வகையில் நடிகர் சித்து விஜய் டிவியின் ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடித்து வர நடிகை ஸ்ரேயாவும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனது பங்களிப்பை கொடுத்து வந்தார்.

தமிழகத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு? ஓமைக்ரான் பரவல் எதிரொலி!!

இப்படி இருக்க கடந்த மாதத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த ஆர்யன் – ஷபானா, மதன் – ரேஷ்மா ஆகிய நட்சத்திர ஜோடிகளின் திருமணத்திற்கு பிறகு சித்து – ஸ்ரேயாவின் திருமணமும் எதிர்பாராத விதமாக நடைபெற்று முடிந்தது. இதையடுத்து இவர்களது திருமணம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் திருமணத்திற்கு பின்பு நடிகர் சித்து மற்றும் நடிகை ஸ்ரேயா இருவரும் சேர்ந்து வெளியிட்ட புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here