TNPSC குரூப் 2 தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – புதிய பாடத்திட்டம்! முக்கிய தகவல்!

0
TNPSC குரூப் 2 தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - புதிய பாடத்திட்டம்! முக்கிய தகவல்!
TNPSC குரூப் 2 தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - புதிய பாடத்திட்டம்! முக்கிய தகவல்!
TNPSC குரூப் 2 தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – புதிய பாடத்திட்டம்! முக்கிய தகவல்!

தமிழகத்தில் TNPSC தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்கு உரிய பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் பகுதி நீக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டு புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

குரூப் 2 பாடத்திட்டம்:

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள முதல்நிலை முதல் நான்காம் நிலை வரை உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு TNPSC தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தேர்வுகள் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து TNPSC தேர்வு வாரிய அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதமும், குரூப் 2, 2A தேர்வுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதமும் நடைபெறும் என்று தகவல் வெளியிட்டுள்ளனர்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை காவ்யா செய்த சாதனை – டாப் 10 புதுமுக நாயகிகள் பட்டியலில் முதலிடம்!

மேலும் குரூப் 2A தேர்வுக்கு 5,831 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குரூப் 2, 2A தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் சிறிது மாற்றங்கள் செய்து TNPSC தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் குரூப் 2, 2A தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் திருக்குறள் பகுதி நீக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் திருக்குறள் பகுதி இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு தற்போது தமிழ் மொழியை கட்டயாமாக்கியுள்ளது. அதனால் திருக்குறள் பகுதி மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

சேலத்தில் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? தீவிரமடையும் ஓமிக்ரான் தொற்று!

ஏனெனில் திருக்குறள் பகுதி நீக்கப்பட்டது தேர்வர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால் தற்போது பாடத்திட்டம் மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தீர்வுத்திட்டம் குறித்து பின்வருமாறு காணலாம்.

1. கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்(விரிந்துரைக்கும் வகை)

2. கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்(கொள்குறி வகை)

3. கட்டாயத் தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறிவகை)

இவற்றில் விரிந்துரைக்கும் வகையில் தமிழ் மொழி தகுதித் தேர்வில் தொகுதி 11 மற்றும் 11 A தொகுதிகளில் திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் எனும் பகுதி சேர்க்கப்பட்டு திருப்பட்ட பாடப்பகுதி TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!