
தமிழகத்தில் ‛தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தடை – காட்சிகளை ரத்து செய்த மல்டிப்பிளக்ஸ் திரையரங்குகள்!
சுதிப்டோ சென் இயக்கத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகத்தில் ‛தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மல்டிப்பிளக்ஸ் திரையரங்குகள் தெரிவித்துள்ளன.
காட்சிகள் ரத்து
தி கேரளா ஸ்டோரி படம் விபுல் ஷா தயாரிப்பில் சுதிப்டோ சென் இயக்கத்தில் இந்தியில் தயாரான படம் ஆகும். இந்த படமானது கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற எதிர்க்கட்சிகளும், பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அரசியல் காட்சிகள் சில படம் வெளியாகும் திரையரங்குகளில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
தமிழகத்தில் 351வது நாளாக மாற்றம் இல்லாமல் பெட்ரோல், டீசல் விலை விற்பனை – இன்றைய நிலவரம்!
இந்நிலையில் தமிழகத்தில் ‛ தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மல்டிப்பிளக்ஸ் திரையரங்குகள் அறிவித்துள்ளனர். மேலும் இந்த படம் குறித்து சர்ச்சைகள் கிளம்பியதால், இன்று (மே 7) இந்த படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும். இனிமேல் இந்த படத்தை திரையிடமாட்டேன் என மல்டிப்பிளக்ஸ் திரையரங்குகள் அறிவித்துள்ளன.