நாடு முழுவதும் கொரோனா தொற்றின் எதிரொலி – WHO எச்சரிக்கை!

0
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் எதிரொலி - WHO எச்சரிக்கை!
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் எதிரொலி - WHO எச்சரிக்கை!
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் எதிரொலி – WHO எச்சரிக்கை!

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், கடந்த ஒரு வாரத்தில் பதிவான வாக்குகளின் விகிதம் குறைந்துள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

கொரோனா:

நாடு முழுவதும் தற்போதும் கொரோனா பரவல் அதிகரித்தபடியே இருக்கிறது. கடந்து 2020 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா பரவல் இன்று வரைக்கும் உலக அளவில் பரவியபடியே தான் இருக்கிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு கொரோனா பரவல் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே நாடு முழுவதும் பதிவான வழக்குகளின் அடிப்படையில் உலகம் முழுவதும் எல்லா இடங்களிலும் புதிதாக பரவும் கொரோனா வைரஸ்களின் எண்ணிக்கை சுமார் 12 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 4.2 மில்லியனுக்கும் குறைவான தொற்று பதிவாகியுள்ளதாகவும், சுமார் 13,700 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே இறப்பு விகிதம் 5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனாலும், அதற்கு அடுத்த வாரமும் இதைப்போல தொற்று பரவல் வீழ்ச்சியடையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இதனால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை – உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

Exams Daily Mobile App Download

மேலும், கடந்த ஒரு வாரத்தில் தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்துள்ளதாகவும், ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் மேற்கு பசிபிக் நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும் WHO அறிவித்துள்ளது. குறிப்பாக, பிப்ரவரி மாதத்திலிருந்து எடுத்த கணக்கெடுப்பின்படி இறப்பு விகிதம் நாடு முழுவதும் 80 சதவீதம் குறைந்து இருந்தாலும் கூட ஒவ்வொரு 44 வினாடிகளுக்கும் ஒருவர் கொரோனா தொற்றினால் பலியாகி வருவதாகவும் அறிக்கை வெளியாகி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!