அக்.14ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

0
அக்.14ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு - மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
அக்.14ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு - மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
அக்.14ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள லடாக் லே மாவட்டத்தில் அனைத்து விதமான பள்ளிகளையும் மீண்டும் திறக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த வகுப்புகள் அக்டோபர் 14 முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

நாடு முழுவதும் தற்போது கொரோனா நோய் தொற்று குறைந்திருக்க கூடிய சூழலில் லடாக் லே மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளையும் மீண்டுமாக திறக்க அரசு அனுமதி செய்துள்ளது. அந்த வகையில் அக்டோபர் 14ம் தேதி முதல் 9 லிருந்து 12ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் துவங்க இருக்கிறது. இதற்கு முன்னதாக அம்மாநிலத்தில் கடந்த மாதம் துவங்கப்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்ததால் செப்டம்பர் 18ம் தேதியுடன் பள்ளிகள் மூடப்பட்டது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோருக்கு ஷாக் அறிவிப்பு – 2 மாதங்களில் 87% பேர் உயிரிழப்பு!

இதை தொடர்ந்து தற்போது பள்ளிகளை மீண்டுமாக திறக்க அனுமதி அளித்துள்ள லே மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பாலசாகேப் சூஸ் பிறப்பித்த உத்தரவில், ‘லே மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட குடியிருப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகள் அக்டோபர் 14 முதல் 9 லிருந்து 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக திறக்க அனுமதிக்கப்படும். இருப்பினும், அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அக்டோபர் 13 ஆம் தேதிக்குள் தலைமைக் கல்வி அலுவலருடன் ஒருங்கிணைந்து சுகாதார பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அக்.15க்குள் ‘இது’ கட்டாயம்!

மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி முடிந்தவரை ஊக்குவிக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வகையில் குடியிருப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகள் மொத்த திறனில் 50 சதவிகிதத்துடன் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும். அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், வார்டன்கள், ஊழியர்களுக்கு RT-PCR பரிசோதனை கட்டாயமாக்கப்படும். இந்த சோதனை முடிவை சமர்ப்பிக்கும் நபர்கள் மட்டுமே விடுதிகள் அல்லது குடியிருப்பு பள்ளிகளில் நுழைய அல்லது தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here