பான் – ஆதார் இணைப்பிற்கு ஜூன் 30 வரை கால அவகாசம் – இன்னும் 5 நாட்கள் மட்டுமே!

0
பான் - ஆதார் இணைப்பிற்கு ஜூன் 30 வரை கால அவகாசம் - இன்னும் 5 நாட்கள் மட்டுமே!
பான் - ஆதார் இணைப்பிற்கு ஜூன் 30 வரை கால அவகாசம் - இன்னும் 5 நாட்கள் மட்டுமே!
பான் – ஆதார் இணைப்பிற்கு ஜூன் 30 வரை கால அவகாசம் – இன்னும் 5 நாட்கள் மட்டுமே!

மத்திய அரசின் உத்தரவின் படி, பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் முடிவடைவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இந்த சேவைகளை விரைந்து நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பான் – ஆதார் இணைப்பு

வருமானவரி செலுத்தும் பான் அட்டை பயனர்கள் தங்களது ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து இந்த இணைப்புக்கான காலக்கெடு மார்ச் 31 வரை கொடுக்கப்பட்டது. பின்னர் நாடு முழுவதும் உருவான கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு கால அவசகாசம் ஜூன் 30 வரை நீட்டித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது. இந்த அறிவிப்பின்படி ஆதார் – பான் இணைப்பதற்கான கால அவகாசம் முடிவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் உடன் கொரோனா தடுப்பூசி சான்று இணைப்பு – தமிழக அரசு உத்தரவு!

இது தவிர குறிப்பிட்ட இந்த 5 நாளைக்குள், அதாவது ஜூன் 30 க்குள் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. அந்த வகையில் ஆதார் – பான் இணைப்பை உங்கள் வீடுகளில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக இப்போது நிறைவேற்றிக்கொள்ளலாம்.

பாஸ்போர்ட் உடன் கொரோனா தடுப்பூசி சான்று இணைப்பு – தமிழக அரசு உத்தரவு!

SMS மூலம் ஆதார் – பான் இணைப்புக்காக,

  • UIDPAN என்று டைப் செய்து சிறிது இடைவெளி விட்டு (SPACE) 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து, சிறிது இடைவெளி விட்டு மீண்டும் 10 இலக்க PAN எண்ணை பதிவிட்டு, 567678 அல்லது 56161 க்கு SMS அனுப்பவேண்டும்.
  • எடுத்துக்காட்டாக உங்கள் SMS (UIDPAN 0000011112222 AAAPA7777Q) இந்த வகையில் இருக்க வேண்டும்.
  • மேலே குறிப்பிட்டுள்ள எண்களுக்கு SMS அனுப்பிய பிறகு, வரி செலுத்துவோரின் பெயர் மற்றும் பிறந்த தேதி இரண்டு ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதை போலவே இருந்தால், உங்கள் ஆதார் எண், பான் எண்ணுடன் இணைக்கப்படும்.

வலைதளம் வழியான இணைப்பிற்கு

  • வரி செலுத்துவோர் வருமான வரித் தறையின் புதிய போர்ட்டலை திறக்க வேண்டும்.
  • அதாவது incometaxindiaefiling.gov.in. என்ற இணையத்தில் உள்ள Link Aadhaar பிரிவை தேர்ந்தெடுக்கவும்.
  • அந்த இணைப்பை கிளிக் செய்தால், வரி செலுத்துபவர் பெயர், பான் அட்டை எண், ஆதார் எண் போன்ற விவரங்கள் கேட்கப்படும்.
  • பிறகு வேறொரு பக்கம் திறக்கும்.
  • தேவையான விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உங்கள் ஆதார் – பான் ஆவணங்கள் இணைக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!