TN TRB முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – வயது வரம்பு இதுவரை தான்!

1
TN TRB முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - வயது வரம்பு இதுவரை தான்!
TN TRB முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - வயது வரம்பு இதுவரை தான்!
TN TRB முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – வயது வரம்பு இதுவரை தான்!

தமிழகத்தில் அரசுப்பணி நியமனத்திற்கான வயது வரம்பு குறித்து நீட்டித்த விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் ஒரு முக்கிய கோரிக்கையை முன் வைத்துள்ளது.

வயது வரம்பு:

தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் இதர அரசு பணியாளர்களின் வயது வரம்பு 57 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தில் மட்டுமில்லை மத்திய ஆசிரியர் பணிக்கும் பணி நியமன வயது வரம்பு 57 ஆக தான் இதுவரையில் நிர்ணயத்தில் இருந்து வருகிறது. பணி ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்து வருகிறது.ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. அதனால் அரசுப்பணி தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. அதனை தொடர்ந்து அரசுப் தேர்வுகளுக்கு முயற்சி செய்து வந்த அனைவருக்கும் வயது கடந்து சென்றது. இருப்பினும் முயற்சியை கைவிடாமல் படித்து வந்தனர். இந்நிலையை கருத்தில் கொண்டு பணி ஓய்வு பெறுபவர்களின் வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. பின் அரசுப்பணி நியமன வயது இரண்டு வருடங்கள் அதிகரித்து 59 ஆக மாற்றியிருக்க வேண்டும். ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு 57 வயதிலிருந்து பொதுப்பிரிவினருக்கு 40 ஆக குறைத்தது.

ஜீ தமிழ் ‘திருமதி ஹிட்லர்’ சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

மேலும் பொதுப்பிரிவினருக்கு 45 ஆகவும் வயதை குறைத்து ஆணை வெளியிட்டது. இத்தகைய அரசாணையை கண்டித்து பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் அவர்கள் ஆசிரியர்களுக்கு வயது வரம்பை குறைத்து அவரது கேடுகெட்ட மனநிலையை எடப்பாடி வெளிப்படுத்தி விட்டார் என்று விமர்சித்திருந்தார். மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த அரசாணையை திரும்ப பெற்று பழைய வயதை மீண்டும் அறிவிப்போம் என்றும் கூறியிருந்தார். தற்போது திமுக ஆட்சியை பிடித்துள்ளது. இந்த ஆட்சியிலாவது அரசாணை மாற்றப்படும் என்று பட்டதாரிகள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். பலர் அதனை எதிர்த்து வழக்கும் தொடர்ந்தனர். ஆனால் வெகுநாட்களாக திமுகவின் பதில் மௌனமாகவே இருந்து வந்தது. போராட்டம் மட்டும் தொடர்ந்து வந்தது.

தமிழகத்தில் நாளை (அக்.21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

பின்னர் ஏதோ கடமைக்கு செய்யும் விதமாக ஆசிரியர் பணி நியமன வயதை பொதுப்பிரிவினருக்கு 40 லிருந்து 45 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சீர்மரபினர் என மற்ற பிரிவினருக்கு 5 ஆண்டுகள் விலக்கு அளித்து 50 ஆகவும் மாற்றி அரசாணை வெளியிட்டார். இந்த அரசாணை இந்த வருடத்தோடு, அதாவது 31.12.2021ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று அறிவித்திருக்கிறார். பின்னர் பொதுப்பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட 45 லிருந்து 42 ஆகவும், மற்ற பிரிவினருக்கு 50 லிருந்து 47 ஆகவும் 3 ஆண்டுகள் குறைக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். அரசு வேலை என்பது பலருக்கும் கனவாக இருந்து வரும் நிலையில் அவர்களின் கனவுகள் கருகிப்போவதை அனுமதிக்கக்கூடாது. இவ்விவகாரத்தில் திமுக அரசானது எதிர்க்கட்சியாக இருந்தபோது வலியுறுத்தியதை போலவே உச்ச வயது வரம்பை 57 அல்லது 59 ஆக்குவதற்கான ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Mudunilai asiriyarkaga Velai vaipu aluvalagathil pathinju pala aandugalaga kathirukirom. Velai vaipu aluvalagathin moolam 50% um TRB exam moolam 50% um velai pottal palarudaiya vazhvu malarum. Edhai karuthil kondu anai pirapikum maari thalmaiyudan kettu kolgirom.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!