“தமிழும் சரஸ்வதியும்” திருமண வைபோகம் – சிறப்பு விருந்தினராக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நட்சத்திரங்கள்!

0
"தமிழும் சரஸ்வதியும்" திருமண வைபோகம் - சிறப்பு விருந்தினராக "பாண்டியன் ஸ்டோர்ஸ்" நட்சத்திரங்கள்!
“தமிழும் சரஸ்வதியும்” திருமண வைபோகம் – சிறப்பு விருந்தினராக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நட்சத்திரங்கள்!

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் தமிழ் சரஸ்வதியின் திருமண வைபோகம் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

தமிழும் சரஸ்வதியும்:

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதை படித்த மருமகள் வேண்டும் என சொல்ல, தமிழ் சரஸ்வதியை காதலிக்கிறார். சரஸ்வதி படிக்காத பெண் என்பதால் அவரை பற்றிய உண்மை சொன்னால் கோதை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளமாட்டார் என்பதால் பல தில்லுமுல்லு வேலைகளை செய்து கஷ்டப்பட்டு திருமண ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் சரஸ்வதியின் படிப்பு பற்றி சந்திரகலாவிற்கு தெரிந்துவிட ஆதாரத்துடன் சரஸ்வதியை மாட்டிவிட பல வேலைகளை செய்கிறார்.

தூக்கு போட்டுக்கொள்ளும் வெண்பா “பாரதி கண்ணம்மா” சீரியல் கிளைமேக்ஸ் – ரசிகர்கள் குழப்பம்!

சரஸ்வதி படிக்கும் டியூசனுக்கு வந்து கீதா பல வேலைகளை செய்ய மார்க் ஷீட்டை புடுங்கி கொண்டு ஓட தமிழ் அவரை துரத்தி சென்று பிடித்து வாங்குகிறார். இப்படி திருமணத்தை தடுக்க சந்திரகலா போடும் திட்டங்களை தமிழ் முறியடிக்க திருமண நாள் நெருங்கி வந்துள்ளது. தமிழ் சரஸ்வதி திருமணம் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் வர இருக்கின்றனர். ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழும் சரஸ்வதியும் மகா சங்கமத்தில் இரண்டு குடும்பமும் நெருக்கமாகி இருக்கின்றனர்.

சன் டிவி “கண்ணான கண்ணே” சீரியலில் இருந்து விலகிய முன்னணி நடிகை – ரசிகர்கள் ஷாக்!

அதே போல தனமும் தமிழ் சரஸ்வதி காதல் விவகாரம் தெரிந்து திருமணம் பற்றி கோதையிடம் பேசினார். இப்போது தமிழ் சரஸ்வதி திருமண வைபோகம் நடைபெறுவதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்கள் வர இருக்கின்றனர். அது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சரஸ்வதி அம்மாவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!