தூக்கு போட்டுக்கொள்ளும் வெண்பா “பாரதி கண்ணம்மா” சீரியல் கிளைமேக்ஸ் – ரசிகர்கள் குழப்பம்!

0
தூக்கு போட்டுக்கொள்ளும் வெண்பா
தூக்கு போட்டுக்கொள்ளும் வெண்பா "பாரதி கண்ணம்மா" சீரியல் கிளைமேக்ஸ் - ரசிகர்கள் குழப்பம்!
தூக்கு போட்டுக்கொள்ளும் வெண்பா “பாரதி கண்ணம்மா” சீரியல் கிளைமேக்ஸ் – ரசிகர்கள் குழப்பம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பல திருப்பங்கள் நடைபெற இருப்பது போல ப்ரோமோ காட்டப்பட்ட நிலையில் மீண்டும் பாரதி பழையபடி மாறிவிட்டார். இந்நிலையில் வெண்பா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்வது போல வீடியோ ஒன்று வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் பல மொழிகளில் வெற்றி பெற்ற சீரியல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. தமிழில் டாப் வரிசையில் இருக்கும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் சென்ற வாரம் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ தொடங்கியது போலவும் பாரதி கண்ணம்மாவை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டது போலவும் காட்டப்பட்டது. அதனால் சீரியல் முடிந்துவிடுமா என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

சன் டிவி “கண்ணான கண்ணே” சீரியலில் இருந்து விலகிய முன்னணி நடிகை – ரசிகர்கள் ஷாக்!

பாரதி கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ்வேன் ஆனால் நீ தவறு செய்ததை ஒப்புக்கொள் என சொல்ல கண்ணம்மா எதுவும் பேசாமல் கை எடுத்து கும்பிட்டுவிட்டு கிளம்புகிறார். பாரதி நடந்து கொண்டதை பார்த்து சௌந்தர்யா திட்ட, ஆதங்கம் தாங்க முடியாமல் அகில் திட்ட, பதிலுக்கு அஞ்சலி கூட திட்டுகிறார். மேலும் கண்ணம்மா அப்பா பாரதிக்கு சாபம் விட, கண்ணம்மா என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். அப்போது லக்ஷ்மியை வழியில் பார்த்த கண்ணம்மா அவரை தன்னுடன் அழைத்து செல்கிறார்.

தனது கணவரை பற்றி முதன்முறையாக மனம் திறந்த “பிக் பாஸ்” பிரியங்கா – ரசிகர்கள் ஷாக்!

இப்படி இருக்க வெண்பா தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்வது போல வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அப்போ வெண்பா இறந்துவிட்டால் சீரியலில் எந்த மாதிரி திருப்பங்கள் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் அப்படி எதுவும் நடக்க போவது இல்லை. வெண்பாவிடம் உண்மையை சொல்லி மாயாண்டி காப்பாற்றி விடுவார். அடுத்து பாரதியை சௌந்தர்யா வெளியே போக சொன்னதால் அவர் வெண்பாவை தேடி செல்வார் இது தான் அடுத்து வரும் எபிசோடுகளில் நடைபெற இருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here