Telegram பயனர்கள் கவனத்திற்கு – புதிய எமோஜி, தீம் உடன் அப்டேட்!

0
Telegram பயனர்கள் கவனத்திற்கு - புதிய எமோஜி, தீம் உடன் அப்டேட்!
Telegram பயனர்கள் கவனத்திற்கு - புதிய எமோஜி, தீம் உடன் அப்டேட்!
Telegram பயனர்கள் கவனத்திற்கு – புதிய எமோஜி, தீம் உடன் அப்டேட்!

சமீப காலமாக வளர்ந்து வரும் டெலிகிராம் செயலியில் வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு தற்போது புதிய பதிப்புகள் வெளிவந்துள்ளது. இது உரையாடலை இன்னும் சுவாரஸ்யமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் செயலி:

டெலிகிராம் செயலி ஸ்மார்ட்போன்களில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்ற செயலி ஆகும். கிளவுட் அடிப்படையில் தொலை பேசி எண்னை அடையாளமாக கொண்டு சேவை வழங்கிறது. ஆண்ட்ராய்டு, iOS, விண்டோஸ் தொலைபேசி போன்றவற்றில் செயல்படுத்த முடியும். இது குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் இரண்டும் சேர்ந்த கலவையாகும்.புகைப்படங்கள், காணொளிகள், ஒலி, மற்றும் கோப்புகள் போன்றவை எந்த வகையில் இருந்தாலும் பரிமாற்றம் செய்ய முடியும்.

தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு – பொதுப்பிரிவினர் கவனத்திற்கு!

தற்போது டெலிகிராம் ஒரு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. லைவ் ஸ்ட்ரீம்கள் மற்றும் வீடியோ சாட்களை பதிவு செய்வதற்கான புதிய அம்சத்தை வழங்கியுள்ளது. மேலும், புதிதாக 8 சாட் தீம்களையும் வழங்கியுள்ளது. புதிய அப்டேட்டின் மூலம் முழு திரை எஃபக்ட் மற்றும் இமோஜிகளையும் பயனர்கள் பெறுவார்கள். இதன் மூலம் தனித்தனியாக சாட்களுக்கு டெலிகிராமின் புதிய சாட் தீம்களைப் பயன்படுத்த முடியும். புதிய தீம்களில் gradient message bubbles, அனிமேஷன்வடிவங்களைக் கொண்டிருக்கும்.

அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை – 1 சதவீதத்திற்கு கீழ் அரசு பள்ளிகள்!

புதிய தீம்கய் பெற உங்கள் செயலியை புதுப்பித்துக் கொள்ளுங்கள். அதனை செயல்படுத்த சாட் சாளரத்தில் உள்ள சாட் தலைப்புப் பெட்டியை க்ளிக் செய்ய வேண்டும். பிறகு மூன்று-புள்ளி ஐகானைக் கிளிக் செய்து, தீம்களை இயக்க வண்ணங்களை மாற்று என்பதை தேர்வு செய்ய வேண்டும். மேலும், குழுவில் உள்ள மற்ற பயனர்கள் தங்கள் செய்தியைப் பெற்றிருக்கிறார்களா/ படிக்கிறார்களா என்பதைப் பயனர்கள் அறிந்து கொள்ள முடியும். வாசித்து உள்ளார்கள் என்பதை இரண்டு டிக் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!