தமிழகத்தில் போராட்டம் நடத்த ஆசிரியர் சங்கக் கூட்டமைப்பு முடிவு – தேதி அறிவிப்பு!!

0
தமிழகத்தில் போராட்டம் நடத்த ஆசிரியர் சங்கக் கூட்டமைப்பு முடிவு - தேதி அறிவிப்பு!!
தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம்:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவ்வப்போது பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. இந்நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

TN TRB Annual Planner 2024 – அதிகாரப்பூர்வ வெளியீடு!!

அதாவது, சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நுாலகர்கள், பல்வேறு துறைகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பகுதிநேர பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 20ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் போராட்ட ஆயத்த கூட்டம் நடைபெறும்.

ஜன.30ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், பிப்.15 ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டமும், பிப். 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!