ஆசிரியர் தகுதி தேர்விற்கான காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கும் முறை & சம்பள விவரம்!

0
ஆசிரியர் தகுதி தேர்விற்கான காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கும் முறை & சம்பள விவரம்!
ஆசிரியர் தகுதி தேர்விற்கான காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கும் முறை & சம்பள விவரம்!
ஆசிரியர் தகுதி தேர்விற்கான காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கும் முறை & சம்பள விவரம்!

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில், எப்படி இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது மற்றும் சம்பள விவரம் குறித்தான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர்:

தமிழக அரசுப் பள்ளிகளில் மட்டுமே கிட்டத்தட்ட 13, 331 இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் உள்ளன. மேலும், இந்த ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை கொண்டுதான் நிரப்பப்படுகின்றன. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தவில்லை. மேலும், ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்வான ஆசிரியர்களுக்கும் பணியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளன. இதனால் அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Exams Daily Mobile App Download

இதனால் மாணவர்களின் நலன் கருதி தற்காலிகமாக ஆசிரியர்களை கொண்டு இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே யார் யாரெல்லாம் இந்த தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், சம்பள விவரங்கள் குறித்தான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கும் இந்த தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும், முதுநிலை ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 7,500 சம்பளமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ரூ 10,000சம்பளமும், முதுநிலை ஆசிரியர்களுக்கு மாதத்திற்கு12 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை மறுநாள் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – அறிவிப்பு வெளியீடு

இதனையடுத்து, இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் வட்டாரக் கல்வி அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு எந்தெந்த பகுதியில் காலிப் பணியிடங்கள் உள்ளன என்பதனை தெரிந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள பள்ளியை தொடர்பு கொண்டும் காலியான பணியிடங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!