TCS நிறுவனத்தில் ஆப் கேம்பஸ் மூலம் வேலைவாய்ப்புகள் – விண்ணப்ப முறை & தகுதிகள்!

0
TCS நிறுவனத்தில் ஆப் கேம்பஸ் மூலம் வேலைவாய்ப்புகள் - விண்ணப்ப முறை & தகுதிகள்!
TCS நிறுவனத்தில் ஆப் கேம்பஸ் மூலம் வேலைவாய்ப்புகள் - விண்ணப்ப முறை & தகுதிகள்!
TCS நிறுவனத்தில் ஆப் கேம்பஸ் மூலம் வேலைவாய்ப்புகள் – விண்ணப்ப முறை & தகுதிகள்!

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் வரும் அக்டோபர் மாதத்தில், வளாகத்திற்கு வெளியே பணியமர்த்தல் மூலம் புதிய ஊழியர்களை சேர்க்க இருப்பதாக அறிவித்துள்ளது.

புதிய பணியமர்த்தல்

தொழில்நுட்ப சேவையில் முதன்மை இடத்தை வகித்திருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் சமீபத்தில் புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்திருந்தது. இதையடுத்து புதிய ஊழியர்களை பணியமர்த்துவது தொடர்புடைய செயல்முறையை வரும் அக்டோபர் மாதம் முதல் மேற்கொள்ள இருப்பதாக TCS நிறுவனத்தின் சமீபத்திய தகவல்கள் கூறுகிறது. இது தொடர்பான TCSன் அதிகாரப்பூர்வ இணையதள தகவலின் படி, விண்ணப்பப்பதிவுகளை செய்வதற்கு கடைசி தேதி செப்டம்பர் 24 என குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – கால இடைவெளியை குறைக்க உத்தரவு!

தவிர புதிய பணிக்கான தேர்வுகள் வரும் அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் TCS நிறுவனம் 2020 – 2021 ஆண்டுகளில் B.E., B.Tech, M.E, M.Tech, MCA மற்றும் M.Sc பட்டம் பெற்ற புதியவர்களை பணியில் அமர்த்தும் என தெரிகிறது. அதன் கீழ், TCS ஆப் கேம்பஸ் பணியமர்த்தலுக்கான விண்ணப்ப செயல்முறைகளை பொருத்தளவு, விண்ணப்பதாரர்கள் TCSன் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று TCS ஆப் கேம்பஸ் பணியமர்த்தல் செயல்முறையில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை – தமிழக அரசு!

TCS ஆன்லைன் தளத்தில் ஏற்கனவே பதிவு செய்த பயனராக இருந்தால், லாகின் செய்து விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். அதை சமர்ப்பித்தவுடன், Apply For Drive என்பதைக் கிளிக் செய்யவும். TCS இணைய தளத்தை புதிதாக திறந்தால், Register Now என்பதை கிளிக் செய்து, IT வகையை தேர்ந்தெடுத்து உங்கள் விவரங்களை நிரப்பவும். இப்போது விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பித்து, Apply For Drive என கொடுக்கவும். இப்போது Track Your Application என்பதை கொடுத்து விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்கலாம்.

இதனுடன் TCS நிறுவனத்தின் பணிக்கு கீழ் காணும் தகுதிகள் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி,

  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்கள் மற்றும் பட்டம் பெற்ற சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து அசல் கல்வி ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • தேர்வு தொடர்பான தகவல்கள் TCS iON மூலம் பகிரப்படும்.
  • Apply for Drive ல் பதிவு செய்யப்பட்ட நேரத்தில் தேர்வு நடைபெறும். ஒரு முறை பதிவு செய்த பின் இவற்றை பின்னர் மாற்ற முடியாது.
  • இந்த தேர்வுகளில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் முதுகலை உள்ளிட்ட கல்வி தகுதியுடன், அனைத்து செமஸ்டர்களிலும் அனைத்து பாடங்களிலும் 60% அல்லது 6 CGPA மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களுக்கு எந்தவொரு பாடமும் நிலுவையில் இருக்கக்கூடாது.
  • கல்வியில் இடைவெளிகள் இருந்தால், அதை கட்டாயமாக அறிவிக்க வேண்டும். அதன் கீழ் மொத்த கல்வி இடைவெளி 27 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • நேரடி படிப்புகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
  • பணியில் 2 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவர்கள் TCS ஆப் கேம்பஸ் பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியால் வழங்கப்படும் B.E, B.Tech, M.E., M.Tech, MCA மற்றும் M.Sc படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்து.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!