TCS NQT தேர்வு 2023 – 1000க்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகள்!
வேலைவாய்ப்பை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான TCS ஆனது National Qualifier Test மூலம் 1000க்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் அனைத்து விவரங்களையும் தெரிந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | TCS |
தேர்வின் பெயர் | NQT Test |
பணியிடங்கள் | 1000+ |
கடைசி தேதி | 03.05.2023 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தகுதி:
- கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களில் விருப்பமுள்ளவர்கள் இந்த தேர்வினை எழுத விண்ணப்பிக்கலாம்.
- ஏதேனும் ஒரு இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமோ பாடங்களில் இறுதி ஆண்டு பயில்வோர், இறுதி ஆண்டிற்கு முந்தைய ஆண்டில் (Pre Final) பயில்வோர், மற்றும் படித்து முடித்தவர்கள் ஆகியோர் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும் 2018 – 2024 க்கு இடையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டம் பெற்று 2 வருடங்களுக்கும் குறைவான அனுபவமுள்ள Fresher’s விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை:
தேசிய தகுதித் தேர்வு (NQT) ஆனது மே 14, 2023 முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ECGC PO அறிவிப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்…!
NQT ஊதிய தொகை :
இந்த தேர்வுகளில் தேர்வாகும் நபர்களுக்கு மிக உயர்ந்த சம்பள தொகுப்பாக ஆண்டிற்கு 19 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் தகுதியானவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.