TCS நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TCS நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தற்போது TCS நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் சில காலியிடங்களுக்கு நாடு முழுவதும் உள்ள புதிய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வேலை வாய்ப்புகள்

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் புதிய பட்டதாரிகளுக்கான ஆட்சேர்ப்பு 2022 இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் TCS நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு காலியிடங்களுக்கு, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற புதிய பட்டதாரிகளை பணியமர்த்த TCS திட்டமிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்திற்கு TCS ஸ்மார்ட் பணியமர்த்தல் என்று பெயரிட்டுள்ளது. இந்நிறுவனம் தேர்வுச் செயல்பாட்டில் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களுக்கு TCS இக்னைட் நிறுவனத்தில் சேருவதற்கான வாய்ப்பை வழங்க இருக்கிறது.

தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!

இந்த தனித்துவமான ‘சயின்ஸ் டு சாப்ட்வேர்’ திட்டம் டிரெண்டிங் டெக்னாலஜிகளை பற்றி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. இப்போது TCSன் ஆட்சேர்ப்பு திட்டத்தில், சேர விரும்பும் நபர்களுக்கு தேவையான கல்வித்தகுதி, விண்ணப்ப முறைகள் உள்ளிட்ட விவரங்களை கீழே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி:
  • கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், மின்னணுவியல், உயிர்வேதியியல், கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இளநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • தகவல் தொழில்நுட்பம் அல்லது கணினி அறிவியலில் BVoc பட்டப்படிப்பு அவசியம்.
  • விண்ணப்பதாரர்கள் 10, 12 மற்றும் மேலே குறிப்பிடப்பட்ட பட்டப்படிப்பு பிரிவுகளில் மாணவர்கள் 5 அல்லது 50% CGPA பெற்றிருக்க வேண்டும்.
  • கல்வியில் ஏதேனும் இடைவெளி இருந்தால் முன்னறே அறிவிக்க வேண்டும்.
  • மாணவர்கள் தங்கள் உயர் கல்வியில் எந்த ஒரு நீட்டிக்கப்பட்ட கல்வியையும் கொண்டிருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப முறை:
  • TCS ஆட்சேர்ப்பு 2022க்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் முதலில் TCSன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
  • TCS ஸ்மார்ட் பணியமர்த்தல் செயல்முறைக்கு புதிய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஆனால், ஏற்கனவே பதிவு செய்துள்ள பயனர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தில் உள்நுழைந்து, விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • அதன் படி, புதிய பயனர்கள் Register Now என்பதைக் கிளிக் செய்து, IT என வகையைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்து, Apply For Drive என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது விண்ணப்பதாரர்கள் சோதனை முறையை தேர்ந்தெடுத்து click on Apply என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • விண்ணப்பங்களின் நிலையை உறுதிப்படுத்த, Track Your Application என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அப்படி செய்தால் Applied for Drive என்று தோன்றும்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!