TCS நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – ஜன.7 விண்ணப்பிக்க கடைசி தேதி!

1
TCS நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - ஜன.7 விண்ணப்பிக்க கடைசி தேதி!
TCS நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - ஜன.7 விண்ணப்பிக்க கடைசி தேதி!
TCS நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – ஜன.7 விண்ணப்பிக்க கடைசி தேதி!

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் வேலைவாய்ப்பை வழங்க முன்வந்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டு வருகிறது. இதற்கான கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் தேதி குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

டிசிஎஸ்:

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில்கள் சரிவடைய தொடங்கியது. இதனால் ஏராளமானோர் வேலையிழந்து தவித்தனர். இந்த நிலையில் தொழில்நுட்பத் துறை மட்டும் தொடர்ந்து இயங்கியது. ஏனெனில் ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சத்தால் பொதுமக்கள் வெளியில் செல்ல தயக்கம் காட்டி வந்தனர். மேலும் அரசும் தேவையற்ற காரணங்கள் இன்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது. அதனால் அனைத்து வேலைகளையும் வீட்டிலிருந்த படி ஆன்லைன் மூலமாக முடிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டினர்.

Post Office இல் குழந்தைகளின் கல்வி செலவுக்காக சேமிக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு – சூப்பர் திட்டம்!

இதன் விளைவாக ஐடி துறையில் பணியாளர்களின் தேவை அதிகரித்தது. அதனால் முன்னணி நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்க முன்வந்தனர். அந்த வகையில் முன்னணி ஐடி நிறுவனங்கள் விப்ரோ, டிசிஎஸ், எச்சிஎல் போன்ற நிறுவனங்கள் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது டிசிஎஸ் ஐடி நிறுவனம் BPS பிரிவுக்கு அண்மையில் பாஸ் – அவுட் ஆன ஃப்ரஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல், வர்த்தகம் போன்ற பாட பிரிவுகளை தேர்தெடுத்து படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ATM கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்வோர் கவனத்திற்கு – ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!

தேந்தெடுக்கப்படுபவர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்கப்படும். பிறகு CBO, Banking and Financial Services and Insurance, Life Sciences ஆகிய பிரிவுகளில் பணி வழங்கப்படும். 2022ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது. மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://nextstep.tcs.com/campus/#/ என்ற இணையதளம் வாயிலாக ஜனவரி 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு 26.01.2022 அன்று எழுத்துத் தேர்வு நடைபெறும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!