VIP-களுக்கு வந்தது விடிவு காலம்.. TCS நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு!

0
VIP-களுக்கு வந்தது விடிவு காலம்.. TCS நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு!
VIP-களுக்கு வந்தது விடிவு காலம்.. TCS நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு!
VIP-களுக்கு வந்தது விடிவு காலம்.. TCS நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு!

இந்தியாவின் மிக பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (TCS) வரவிருக்கும் 2023 ஆம் காலாண்டில் Freshers-களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முன் வந்துள்ளது. இது குறித்து TCS நிறுவனம் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனாவால் ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் அமலாகின. இதனால் ஏராளமான துறைகள் சரிவை சந்தித்தது. அந்த நேரத்தில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலால் அனைத்து வேலைகளும் ஆன்லைன் மயமாகிவிட்டது. அப்போது தகவல் தொழில் நுட்பத்துறையின் தேவை அதிகரித்தது. அதனை தொடர்ந்து ஐடி துறை ஊழியர்களின் தேவையும் அதிகரித்தது.

கிட்டத்தட்ட 400 சதவீதம் அளவில் ஐடி ஊழியர்களின் தேவை அதிகரித்தது. அதனால் இன்ஃபோசிஸ், விப்ரோ, HCL போன்ற பெரிய நிறுவனங்கள் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். குறிப்பாக படித்து முடித்த அனுபவம் இல்லாதவர்களை (freshers) வேலைக்கு எடுக்க முடிவு செய்து பணி நியமனம் செய்தனர். அதனை தொடர்ந்து தற்போது பிரபல நிறுவனமான TCS வரவிருக்கும் 2023ம் நிதியாண்டில் 20,000 பணியாளர்களை புதிதாக பணியமர்த்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக மக்களின் கவனத்திற்கு.. நாளை மாநிலத்தில் மின்தடை – முழு விவரம் உள்ளே!

Exams Daily Mobile App Download

இந்த நிறுவனம் FY 23 இன் முதல் பாதியில் சுமார் 35,000 நபர்களை பணியமர்த்த தேர்வு செய்தது. அதில் 20,000 ஊழியர்களை 2022ம் ஆண்டில் இரண்டாம் காலாண்டில் பணியமர்த்தியது. மேலும் நடப்பு ஆண்டில் 12,000 புதியவர்களை பணியமர்த்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தில் மட்டும் 1 லட்சம் பேரை பணியமர்த்த TCS இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!