ஜூன் 9, 11 & 14ம் தேதிகளில் மதுபான கடைகள் திறக்க அனுமதி – ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மாநிலம் முழுவதும் ஜூன் 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது. மேலும் ஊரடங்கில் சில தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக உத்தரகண்ட் மாநிலத்தில் சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தினசரி புதிய பாதிப்புகள் ஆயிரத்துக்கும் கீழ் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தவிர இறப்பு எண்ணிக்கையும் 20க்கும் கீழ் பதிவாகி வருகிறது.
தமிழக முன்களப் பணியாளர்களுக்கு ரூ.160 கோடி ஊக்கத்தொகை – அரசாணை வெளியீடு!
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட முழு ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஜூன் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது கடைகள் இயங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளன.
TN Job “FB
Group” Join Now
மற்ற நாட்களில் அத்தியாவசிய பொருட்களான பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி போன்ற கடைகள் அனைத்தும் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூன் 9 மற்றும் ஜூன் 14 ஆகிய நாட்களில் எழுதுபொருள் மற்றும் புத்தகக் கடைகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திறந்திருக்கும். மேலும் ஜூன் 9, 11 மற்றும் 14 ஆகிய மூன்று நாட்களுக்கு மதியம் 1 மணி வரை மதுபான கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
உத்தர காண்டத்தில் என்ற தலைப்பு போட்டால் நல்லது!