தமிழகத்தில் நாளை (மார்ச் 12) விடுமுறை – பொதுத்தேர்வு நடக்குமா? முழு விவரம்!

0
தமிழகத்தில் நாளை (மார்ச் 12) விடுமுறை - பொதுத்தேர்வு நடக்குமா? முழு விவரம்!

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (மார்ச் 12) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

உள்ளூர் விடுமுறை

பெண்களின் சபரிமலை எனப்படும் குமரி மாவட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசித் திருவிழா கடந்த மார்ச் 3 ஆம் தேதி விமர்சையாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழாவை பார்க்க தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பக்தர்கள் வருவார்கள். இங்கு பெண்கள் இருமுடி கட்டி வந்து வழிபடுவது வழக்கமாக இருப்பதால் இதனை பெண்களின் சபரிமலை என அழைக்கின்றனர்.

RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

பத்து நாட்கள் நடைபெறும் இத்திரு விழாவில் பங்கேற்க, பெண்கள் 41 நாட்கள் பயபக்தியுடன் அம்மனுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு வருகை தந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். இந்த திருவிழாவின் கடைசி நாளான நாளை (மார்ச் 12) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுத்தேர்வுகள் வழக்கம் போல செயல்படும் எனவும் வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!