தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் – வெளியான முக்கிய அறிக்கை!

0
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் - வெளியான முக்கிய அறிக்கை!
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் – வெளியான முக்கிய அறிக்கை!

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களை தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்களும் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

போராட்டம் அறிவிப்பு

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள். அதனை தொடர்ந்து, டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இது குறித்து சங்க தலைவர் பெரியசாமி , பொது செயலர் தனசேகரன் வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக் மது கடைகளில் 25000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் வேலை செய்கின்றனர்.

தமிழக அரசின் பணி நிரந்தர சட்டப்படி, இரு ஆண்டுகளில் 480 நாட்கள் பணிபுரிந்த ஊழியர்கள், பணி நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால், டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அதனால், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற சட்டசபை கூட்ட தொடரின் போது, சென்னையில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

TNPL நிறுவனத்தில் Assistant General Manager காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!