தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 – அதிக இடங்களில் வென்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகிறார் !!
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று (மே 2) வெளியிடப்பட்டுள்ளது. அதில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 156 இடங்களில் வென்று பெரும்பான்மையோடு தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது.
தேர்தல் முடிவுகள்:
தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 2) நடைபெற்றது. அதன் படி தமிழகத்தில் நேற்று காலை துவங்கிய வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி கட்சிகள் 131 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் மற்ற கூட்டணி கட்சிகளும் 28 இடங்களில் முன்னிலையில் இருந்தது. இதில் திமுக மட்டும் தனித்து 111 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தவிர திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
TN Job “FB
Group” Join Now
தேர்தலில் போட்டியிட்ட பிற கட்சிகளான மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டு இடதுசாரி கட்சிகளும் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் திமுக கூட்டணியின் பிற கூட்டணி கட்சிகள் 4 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக கூட்டணி கட்சிகள் 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 10 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் அதிமுக மட்டும் தனித்து 58 இடங்களில் வென்றுள்ளது.
மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
பாஜக 3 இடங்களில், பாமக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. இந்த தேர்தலின் முடிவில் திமுக கூட்டணி கட்சிகள் 156 இடங்களில் வென்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.