
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று (நவ. 1) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் பல மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (நவ. 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் வட கிழக்கு பருவக் காற்றின் காரணமாகவும், கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள வளிமண்டல சுழற்சி வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிக்குள் நுழைய இருக்கிறது. அதன் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை லேசான மழை பெய்தது. அதன் பின் மாலை 5.30 மணியளவில் தொடங்கிய மழை தொடர்ந்து பல மணி நேரம் வெளுத்து வாங்கியது
சென்னையில் ஒரு மணி நேரத்தில் 4 செ.மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் விடிய விடிய கனமழை பெய்தது. அதனால் இன்று (நவ. 1) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை எதிரொலியாக இன்று (நவ. 1) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.