தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத்தேர்வு – இன்று துவக்கம்!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடத்தப்பட்டது. தேர்தல் பணிகளில் ஈடுப்பட்ட அரசு ஆசிரியர்கள் இன்று (ஏப்ரல் 8) முதல் 12 ஆம் வகுப்பு தேர்வு பணிகளை தொடங்க உள்ளனர்.
ஆசிரியர்களுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் பணிகளில் அரசு ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் ஏப்ரல் 7 ஆம் தேதி அனைத்து ஆசிரியர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
TN Job “FB
Group” Join Now
எனவே ஆசிரியர்கள் தேர்வு பணிகளை முடித்த பின்னர் பள்ளிகளில் பணிகளை கவனிக்க சென்றனர். மேலும் இன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவ தேர்வுகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் இந்த தேர்வுகள் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில் அனைத்து மாணவர்களையும் கட்டாயம் பங்கேற்க வைக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு – கல்வித்துறை திட்டம்!!
இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், “சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கு பின்னர் பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. ஆனால் மதுரையில் மட்டும் விடுமுறை வழங்கப்படவில்லை. மேலும் பள்ளிகளில் ஆயிரத்திற்கு அதிகமானோர் வந்துள்ளதால் கிருமிநாசினி கூட தெளிக்காமல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன”, என ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.