தமிழகத்தில் 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு – கல்வித்துறை செயலாளர் வெளியீடு!!

0
தமிழகத்தில் 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு - கல்வித்துறை செயலாளர் வெளியீடு!!
தமிழகத்தில் 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு - கல்வித்துறை செயலாளர் வெளியீடு!!
தமிழகத்தில் 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு – கல்வித்துறை செயலாளர் வெளியீடு!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை குறித்து கல்வித்துறை செயலாளர் அவர்கள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்குவதால் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

மற்ற 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்வது குறித்து அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் – இன்று முதல் தொடக்கம்!!

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 3 ஆம் தேதி முதல் நடைபெறும் என தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை ஏற்கனவே 40% குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழக மின்சார வாரியத்தில் 9613 காலிப்பணியிடங்கள் – பணிநியமனம் வழங்கல்!!

தற்போது கல்வித்துறை செயலாளர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதன்படி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் பெரும்பாலும் முடிக்கப்பட்டது. 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்த அறிவிப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு பின் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!