டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் – இன்று முதல் தொடக்கம்!!

0
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் - இன்று முதல் தொடக்கம்!!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் - இன்று முதல் தொடக்கம்!!டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் - இன்று முதல் தொடக்கம்!!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் – இன்று முதல் தொடக்கம்!!

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக அரசு பணிகளுக்கான புதிய பணியிடங்கள் உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக ஏற்கனவே அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. இதன்படி 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதே போல TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2a தேர்வு மே மாதத்திலும், குரூப் 3 தேர்வு ஜூலை மாதத்திலும் நடத்தப்படும். மேலும் செப்டம்பர் மாதத்தில் குரூப் 4 மற்றும் VAO தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின்சார வாரியத்தில் 9613 காலிப்பணியிடங்கள் – பணிநியமனம் வழங்கல்!!

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதன்படி மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் சார்பில் அரசு பணிகாக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.

டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் மாற்றம் – தலைமை செயலாளர் உத்தரவு!!

எனவே அரசு பணி பெற வேண்டும் என்ற கனவுடன் தேர்வுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் தேர்வர்கள் இந்த வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற விரும்பினால் இன்று காலை 10 மணிக்கு நேரில் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யு.பி.எஸ்.சி தேர்வுகளில் மறுவாய்ப்பு கிடையாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

அவ்வாறு வரும்போது தேர்வர்கள் தங்களது சுய விவரங்கள் பதிவு செய்து பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம் என மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முறை வழிகாட்டு மையத்தின் துணை இயக்குனர் மகாலட்சுமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!