அரிசி அட்டைக்கு மாறிய 9.55 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் – பொங்கல் பரிசு வாங்க ஆர்வம்!!

0
அரிசி அட்டைக்கு மாறிய 9.55 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் - பொங்கல் பரிசு வாங்க ஆர்வம்!!
அரிசி அட்டைக்கு மாறிய 9.55 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் - பொங்கல் பரிசு வாங்க ஆர்வம்!!
அரிசி அட்டைக்கு மாறிய 9.55 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் – பொங்கல் பரிசு வாங்க ஆர்வம்!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சர்க்கரை பெறும் அட்டைதாரர்கள் அரிசி பெறும் அட்டைதாரர்களாக மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் 9.55 லட்சம் சர்க்கரை அட்டைகள் அரிசி அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரிசி அட்டைகள்:

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த ஆண்டு வரை 1 கோடியே 95 லட்சத்து 5846 அரிசி அட்டைதாரர்களும், 10,19,491 சர்க்கரை அட்டைதாரர்களும் இருந்தனர். கடந்த 2019- ஆம் ஆண்டு தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்ட அறிவிப்பின்படி சர்க்கரை அட்டைதாரர்கள் அரிசி அட்டைகளாக மாற்றி கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவ படிப்புகள் – 3000 மாணவர்கள் விண்ணப்பம்!!

இந்நிலையில் அரிசி அட்டைகளாக மாற்றுவதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை அனுமதிக்கப்பட்டன. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் சென்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்தனர். இதனை அடுத்து சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் தங்களது அட்டைகளை தகுதியின் அடைப்படையில் அரிசி அட்டைகளாக மாற்ற வேண்டும் என்றால் தங்களது குடும்ப அட்டையின் நகலை எடுத்து www.tnpds.gov.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பலாம். மேலும் இணையதள முகவரியில் அனுப்ப முடியாதவர்கள் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் உதவி ஆணையரிடம் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்தாகுமா?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தற்போது கடந்த ஆண்டு அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் பொங்கல்பரிசு தமிழக அரசு அறிவித்த நிலையில் 10,19,941 ஆக இருந்த சக்கரை அட்டைதாரர்களின் எண்ணிக்கை 5,80,298ஆக குறைந்துள்ளது. இதன்படி இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த நிலையில் தற்போது 5,80,000 குடும்ப அட்டைகளில் 3 லட்சத்து 75,235 அட்டைகள் அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் பொங்கல் பரிசு 2 கோடியே 10 லட்சத்து 9963 அரிசி குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படவுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!