சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவ படிப்புகள் – 3000 மாணவர்கள் விண்ணப்பம்!!

0
சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவ படிப்புகள் - 3000 மாணவர்கள் விண்ணப்பம்!!
சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவ படிப்புகள் - 3000 மாணவர்கள் விண்ணப்பம்!!
சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவ படிப்புகள் – 3000 மாணவர்கள் விண்ணப்பம்!!

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 13 தேதி தொடங்கி வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது வரை 3000 மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதிக்கு இன்னும் 6 நாட்கள் உள்ளதால் விண்ணப்பதிவுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

பாரம்பரிய மருத்துவ படிப்புகள்:

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் செயல்படும் 5 அரசு கல்லூரிகளில் மொத்தம் 330 இடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியது. அதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கு கடந்த டிசம்பர் 13 முதல் வரும் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் பல்கலைக்கழக பட்டப் படிப்பிற்கு ஒரே நுழைவுத் தேர்வு – மத்திய அரசு முடிவு!!

இந்நிலையில் இந்திய மருத்துவ முறை படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 280 இடங்கள் மட்டுமே மாநில அரசுக்கு உள்ளது. இதே போல தமிழகத்தில் உள்ள 20 தனியார் கல்லூரிகளில் 15 சதவிகிதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் மீதி, 65 சதவிகிதம் மாநில அரசுக்கும், 35 சதவிகிதம் நிர்வாக அரசுக்கும் உள்ளது.

10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்தாகுமா?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

இதற்காக www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்கள் பதிவு செய்ய இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இதுவரை 3000-க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இன்னும் அதிகமாக விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 30-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.

அதற்கான முகவரி பின்வருமாறு,
செயலாளர்,தேர்வுக்குழு.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் அலுவலகம்,
அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம்,
அரும்பாக்கம், சென்னை-600106

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here