தமிழகத்தில் ஜனவரி மாதத்திற்குள் பள்ளிகளை திறக்காவிடில் ஆர்ப்பாட்டம் – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு!!

2
தமிழகத்தில் ஜனவரி மாதத்திற்குள் பள்ளிகளை திறக்காவிடில் ஆர்ப்பாட்டம் - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு!!
தமிழகத்தில் ஜனவரி மாதத்திற்குள் பள்ளிகளை திறக்காவிடில் ஆர்ப்பாட்டம் - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு!!
தமிழகத்தில் ஜனவரி மாதத்திற்குள் பள்ளிகளை திறக்காவிடில் ஆர்ப்பாட்டம் – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளை ஜனவரி மாதத்திற்குள் திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊர்வலம் மற்றும் போராட்டம் நடத்தவிருப்பதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளை திறக்க அனுமதி:

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில அளவிலான கூட்டம் கடந்த ஞாயிறு மதுரையில் நடைபெற்றது. அதில் மாநில செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் நிர்வாகி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர். மாநில தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார், இந்த கூட்டத்தில் தனியார் பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 6 ஆயிரம் பள்ளிகளில் தாளாளர்கள் பிப்ரவரி மாத இறுதியில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேசிய வேலைவாய்ப்பு கொள்கை – டிசம்பருக்குள் இறுதி வடிவம்!!

தனியார் பள்ளிகள் வலியுறுத்தும் கோரிக்கைகள் பின்வருமாறு,

1. நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளிகளில் தரம் எட்டாம் வகுப்பு வரை உயர்த்தப்பட வேண்டும். அதற்கான அறிவிப்பினை நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்த வேண்டும்.

2. ஜனவரி மாதத்திற்குள் 1-ஆம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க வேண்டும்.

3. கொரோனா காரணமாக பல மாதங்களாக இயங்காமல் உள்ள பள்ளி வாகனங்களின் காப்பீடு மற்றும் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்.

4.கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் இருந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை கால ஊதியமாக 50 சதவிகிதம் வழங்க வேண்டும்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு அரசு வேலை !

5. 10 ஆண்டுகள் தொடர்ந்து அங்கீகாரத்துடன் செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பித்தல் ஆண்டை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று மாற்ற வேண்டும்.

6. அரசால் அறிவிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு தனியாக இயக்குனரகம் தொடங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை தனியார் பள்ளி கூட்டமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Everyone knows the virus spreading day by day and the count is increasing. I dont no why the fools are planning and playing on kids life. If the students meet or sit together the infection may spread or increase high. Only TN govt have to decide for good progress.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!