தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? சுகாதாரத்துறை விளக்கம்!

8
தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? சுகாதாரத்துறை விளக்கம்!
தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? சுகாதாரத்துறை விளக்கம்!
தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? சுகாதாரத்துறை விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் தினசரி அதிகரித்து வரும் நிலையில் தற்போது அமலில் உள்ள முழு ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா? என்கிற கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் விளக்கம் அளித்துளளார்.

ஊரடங்கு நீட்டிப்பு?

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மே 24 வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் அமலபடுத்தப்பட்டு ஒரு வாரம் கடந்த போதிலும் மாநிலத்தில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. தினசரி நோய்த்தொற்று மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 33 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உரிய காரணமின்றி வெளியே செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள முழு ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரி வருகின்றனர். இது தொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு – விரைவில் கடைகள் திறப்பு?

அதற்கு பதிலளித்த அமைச்சர், தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து போகப்போக தான் தெரிய வரும் என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். ஊரடங்கால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். முழு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டதால் கொரோனா அதிகரிப்பது குறைந்து வருகிறது. வேகமாக அதிகரித்த கொரோனா ஊரடங்கு காரணமாக குறையத் தொடங்கியது என தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

8 COMMENTS

  1. 1)ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வாகாது……..மு.க.ஸ்யாலின்…

    2).அன்றாடம் வேலைக்கு செல்லும் சாமானியனின் வாழ்வாதாரம் பாதிக்கும்……மு.க.ஸ்டாலின்…………

    இது தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் அவர்களின் வாதங்கள்……
    1) முழு ஊரடங்கு மட்டுமே கொரோனா வுக்கு தீர்வு……….மருத்துவர்களின் கோரிக்கை…..ஆகவே சிரமங்களை பொருட்படுத்தாமல் வீட்டில் இருங்கள்..மேலும் 15 நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு………….முக ஸ்டாலின்………
    இது தேர்தலுக்கு பிறகு .முக…..ஸ்டாலின் ….அவர்கள் புதிய கண்டு பிடிப்பு…….இதைத்தானே எடப்பாடி அவர்களும் செய்தார்கள்..கொரோனாவால நல்லது செய்தாரோ இல்லையோஇதைவைத்து… அரசியல் செய்தார்கள் திமுகவிர்.‌…

    • Yes Paisa irrukavagaluku lock down ok but ellathavaga enna pannuvaga …. Work ku ponatha avagaluku ellame nadakum . kadan prblm evlo tha avaga solve pannuvaga work pogama easy aa lock down pottu irrukiga .. ippo corona la saguratha vida intha lock down nala tha ella saaga poraga

  2. தும்பை விட்டு வாலை பிடிப்பது இந்தியர்களின் வழக்கம்.

  3. இருக்கிறவனுக்கு பிரச்சினை இல்லை இல்லாதவனுக்கு என்ன செய்வான் நீங்க வந்து வீட்டு வாடகை கொடுப்பிங்களா இல்லை எங்க குடும்பத்தை காப்பாத்துவிங்களா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!