தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான காலியிட விவரங்கள் – கவனத்தில் கொள்ளுமா அரசு!

0
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான காலியிட விவரங்கள்
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான காலியிட விவரங்கள் – கவனத்தில் கொள்ளுமா அரசு!

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணியிடங்கள்:

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கான 8,643 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் தற்போது சமீபத்தில் வெளியான அறிவிப்பு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் உள்ளதாக பாமக நிறுவன டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் 8,643 இடை நிலை ஆசிரியர் பணியிடங்களில் வெறும் ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க மட்டுமே அரசு முன்னதாக அனுமதி அளித்துள்ளது. தற்போது வெளியான அறிவிப்பில் கூடுதலாக 500 ஆசிரியர்களையும் சேர்த்து மொத்தம் 1500 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

உண்மையில் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுமார் பத்து ஆண்டுகளாக அரசு பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. பத்தாண்டுகளில் மொத்தம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெற்று இருக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அரசு 8643 காலி இடங்களை மட்டுமே வெளியிட்டு இருந்த நிலையில் அந்த இடங்களையாவது முழுவதுமாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் வெறும் 1500 ஆசிரியர்களை மட்டும் நியமிப்பது நியாயமற்ற முறையாக உள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளிகள் எப்படி முன்னேற முடியும்? பட்டதாரி ஆசிரியர்களுக்கான காணியிடங்களும் ஆயிரக்கணக்கில் உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் காலிப் பணியிடங்களையும் அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

TNPSC Group IV தேர்வர்களுக்கான புதிய அறிவிப்பு – தேர்வாணையம் சற்றுமுன் வெளியீடு!  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!