தமிழக அரசுப் பள்ளி & கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள்.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை?

0
தமிழக அரசுப் பள்ளி & கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள்.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை?
தமிழக அரசுப் பள்ளி & கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள்.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை?
தமிழக அரசுப் பள்ளி & கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள்.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை?

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் ஆசிரியர் பணிகள் லட்சக்கணக்கில் காலியாக உள்ள நிலையில் அதனை நிரப்புவது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

ஆசிரியர் பணியிடங்கள்

தமிழக அரசு சார்பில் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 10 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. இந்த ஆண்டு அந்த பணியிடங்களை நிரப்புவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டு தொடங்கி 5 மாதம் முடிவடைந்த நிலையில் அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது குறித்து பாமக தலைவர் அன்புமணி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்

பான் கார்டுடன் ஆதாரை இணைக்க இன்னும் ஒரு மாதம் தான் டைம் – உடனே இணைக்கவும்!

அதில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2023 ஆம் ஆண்டு திட்டத்தில் தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும், அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கும் 4000 உதவி பேராசியர்கள் தேர்வு செய்வது குறித்த அறிவிக்கை ஜனவரி மாதம் வெளியிடப்படும். வட்டாரக் கல்வி அலுவலர்கள் 23 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை பிப்ரவரி மாதமும், 6553 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் அறிவிக்கை மார்ச் மாதமும், பட்டதாரி ஆசிரியர்கள் 3,587 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை ஏப்ரல் மாதமும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 விரிவுரையாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை மே மாதமும் வெளியிடப்படும் என தெரிவித்தது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

ஆனால் 2023 ஆம் ஆண்டு தொடங்கி 5 மாதம் முடிவடைந்த நிலையில் ஒரு அறிவிக்கை கூட வெளியாகவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் 2023-ஆம் ஆண்டில் மொத்தம் 8 வகையான பணிகளுக்கு 15,149 பேரையும், அவர்களில் 5 வகையான பணிகளுக்கு 14,656 பேரை நியமிப்பது குறித்து மே மாதம் அறிக்கை வெளியிட வேண்டும். ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் அரசு பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!