தமிழக அரசின் தனியார் வேலைவாய்ப்பு இணையதளம் – 16,086 பேர் இதுவரை பணி நியமனம்!!

0
தமிழக அரசின் தனியார் வேலைவாய்ப்பு இணையதளம் - 16,086 பேர் இதுவரை பணி நியமனம்!!
தமிழக அரசின் தனியார் வேலைவாய்ப்பு இணையதளம் - 16,086 பேர் இதுவரை பணி நியமனம்!!
தமிழக அரசின் தனியார் வேலைவாய்ப்பு இணையதளம் – 16,086 பேருக்கு இதுவரை வேலைவாய்ப்பு!!

தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் தமிழக அரசு சார்பாக தனியார் வேலைவாய்ப்பு இணையதளம் தொடங்கப்பட்டது. தற்போது அந்த இணையதளத்தில் 89,324 பேர் விண்ணப்பித்து 16,086 பேர் அதில் வேலை பெற்றுள்ளதாக தமிழக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய இயக்குனர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு:

கொரோனா காரணமாக பல இளைஞர்கள் வேலை இழந்த சூழ்நிலையில் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தை தொடங்கி வைத்தார். அதன்படி தற்போது அதில் பதிவு செய்த 89,324 விண்ணப்பங்களில் 16,086 பேர் வேலை பெற்றுள்ளதாக தமிழக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய இயக்குனர் வீரராகவ் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவர்கள் பழைய பயண அட்டையை கொண்டு இலவசமாக பயணிக்கலாம் – எம்டிசி அறிவிப்பு!!

காஞ்சிபுரம் மாவட்டம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது, “தமிழக வேலைவாய்ப்பு துறை மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க தமிழக அரசு சார்பாக புதிய இணைதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அதில் விண்ணப்பித்த 89,324 விண்ணப்பங்களில் 16,086 பேர் வேலை பெற்றுள்ளனர். அதில் தற்போது வரை 3000-க்கு அதிகமான தனியார் நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் தேவை என விண்ணப்பித்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதிய வயது அதிகரிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

தமிழக வேலைவாய்ப்பு துறை சார்பாக தனியார் வேளையில் சேர விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!