2வது நாளாக குறையும் தங்கம் விலை – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!
தமிழகத்தில் தங்கம் விலையானது தொடர்ந்து 2வது நாளாக இன்று குறைந்துள்ளது. அதன் படி ஒரு கிராம் தங்கம் ரூ.6,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை;
தமிழகத்தில் தங்கம் விலையானது இந்த மாத தொடக்கம் முதலே தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் நகை வாங்குவது சாமானிய மக்களின் கனவாகி விட்டது. அதனை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு சவரன் ரூ.40 குறைந்து தங்கம் விலை ரூ.49,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியை காண பேருந்துகளில் இலவச பயணம் – உற்சாகத்தில் ரசிகர்கள்…!
அதே போல 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,670 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் ரூ. 53,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன் படி ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 80500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.