தமிழகத்தில் நகைக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி – கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்!

0
தமிழகத்தில் நகைக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி - கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் நகைக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி – கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்!

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளின் படி நகைக்கடன் மற்றும் கல்விக்கடன் உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் நடந்து முடிந்ததான சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்த பல நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் ஆவின் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச கட்டணம், கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 உதவித்தொகை, இலவச மளிகை பொருட்கள் போன்றவற்றை அரசு வழங்கி வருகிறது. இருப்பினும் சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஜூலை 16 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!!

அதாவது கேஸ் சிலிண்டர் மானியமான ரூ.100, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை, விவசாயக்கடன், நகைக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை செயல்படுத்துவது குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இதற்கிடையில் கொரோனா தொற்று காரணமாக அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டதால் குடும்பத்தலைவிகளுக்கான உதவித்தொகை வழங்குவதிலும், இப்போதைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு சாத்தியமில்லை எனவும் தகவல்கள் கசிந்து வருகிறது.

NEET UG 2021 தேர்வு தேதி அறிவிப்பு – இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

இந்நிலையில் விவசாய நகைக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்வது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ‘தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வரும் முக ஸ்டாலின் அவர்கள், தேர்தல் வாக்குறுதிகளில் கொடுத்த படி விவசாய கடன், கல்விக்கடன், கூட்டுறவு சங்கங்களின் உள்ள நகைக்கடன் உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!