NEET UG 2021 தேர்வு தேதி அறிவிப்பு – இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

0
NEET UG 2021 தேர்வு தேதி அறிவிப்பு - இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!
NEET UG 2021 தேர்வு தேதி அறிவிப்பு - இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!
NEET UG 2021 தேர்வு தேதி அறிவிப்பு – இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் 2021 தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கப்பட உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

NEET UG 2021 தேர்வு:

கொரோனா நோய்த்தொற்று 2வது அலை காரணமாக பல்வேறு அரசுத்துறை வேலைவாய்ப்பு, மருத்துவ மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. தற்போது படிப்படியாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் தேர்வுகளை நடத்த கல்வித்துறை தயாராகி வருகிறது. ஏற்கனவே ஜேஇஇ தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இதற்காக மாணவர்கள் தயாராகி வரும் நிலையில் தற்போது நீட் நுழைவுத்தேர்வுக்கான தேதியினை மத்திய கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டு உள்ளார்.

தமிழக அரசின் ‘சி.பா.ஆதித்தனார் விருது’ – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இதற்கான விண்ணப்ப செயல்முறை இன்று மாலை 5 மணி முதல் தொடங்கும். புதிதாக நியமிக்கப்பட்ட கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட்-யுஜி 2021 தேர்வு தேதியை அறிவித்துள்ளார். எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12, 2021 அன்று நடைபெறும். சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை உறுதி செய்வதற்காக, தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 155 முதல் 198 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜூலை 12 முதல் உள்ள வங்கி விடுமுறை நாட்கள் – முழு விவரம் இதோ!

COVID-19 நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்ய, தேர்வு மையத்தில் உள்ள அனைவர்க்கும் முகக்கவசம் வழங்கப்படும். ஏற்கனவே நீட் தேர்வு ஆகஸ்ட் 1, 2021 அன்று நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக, நீட் யுஜி 2021 செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!