தமிழக அரசுப் பேருந்துகளில் இவர்களுக்கு கட்டண சலுகை – அரசிடம் கோரிக்கை!

0
தமிழக அரசுப் பேருந்துகளில் இவர்களுக்கு கட்டண சலுகை - அரசிடம் கோரிக்கை!

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு படுக்கை வசதியுடைய இருக்கைகள் சலுகை கட்டணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சலுகை கட்டணம்

தமிழகத்தில் 500 மின்சார பஸ்கள் உள்ளிட்ட 2271 பேருந்துகள் விரைவில் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதில் 420 பேருந்துகள் மாற்றுத்திறனாளிகளுக்காக இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் ரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் சிலீப்பர் பேருந்துகளிலும் கட்டண சலுகை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

NLC நெய்வேலி புதிய வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.30,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இது குறித்து வெளியான அறிக்கையில், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு படுக்கை வசதியுடைய இருக்கைகள் சலுகை கட்டணத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. இணையதள முன்பதிவிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான படுக்கை வசதி காண்பிக்கப்படுவதில்லை. அதனால் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் படுக்கை வசதி இருக்கைகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும் எனவும், அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றி வரும் ஊர்திபடி வழங்கப்படாத அனைத்து மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கும், உடனடி ஊர்தி படி ரூ.2,500 வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!