தமிழகத்தில் நவீன வசதிகளுடன் 260 அரசு பேருந்துகள் இயக்கம் – முழு விவரம் உள்ளே!

0

தமிழகத்தில் நவீன வசதிகளுடன் 260 அரசு பேருந்துகள் இயக்கம் – முழு விவரம் உள்ளே!

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் படுக்கை மற்றும் இருக்கை வசதியுடன் புதிய பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது.

புதிய பேருந்துகள்

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் தினமும் 1080 டீலக்ஸ், ஏசி வசதி விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பலர் இதில் பயணம் செய்து வரும் நிலையில், பயணிகளின் வசதிக்காக பழைய பஸ்களை நீக்கி புதிய பேருந்துகளை இணைக்கும் பணி நடந்து வருகிறது.

திருப்பதி தரிசனம் செல்வோர் கவனத்திற்கு – உங்களுக்கான ஹாப்பி நியூஸ் இதோ!

இது குறித்து அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறுகையில், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1138 வெளி மாவட்ட பஸ்கள், 1190 நகர பஸ்கள், 672 பஸ்கள் என புதிதாக 3000 புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு படுக்கை மற்றும் இருக்கை வசதியுடன் கூடிய 260 புது சொகுசு பஸ்கள் வாங்கும் பணி நடைபெற்று வருவதாகவும், வரும் மே மாதம் முதல் புதிய பேருந்துகள் வர இருப்பதாகவும், ஜூன் இறுதிக்குள் 260 விரைவு சொகுசு பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!