தமிழகத்தின் 11 கல்வி நிறுவனங்களில் இணையவழி கல்வி – யுஜிசி அனுமதி!!

0
தமிழகத்தின் 11 கல்வி நிறுவனங்களில் இணையவழி கல்வி - யுஜிசி அனுமதி!!
தமிழகத்தின் 11 கல்வி நிறுவனங்களில் இணையவழி கல்வி - யுஜிசி அனுமதி!!
தமிழகத்தின் 11 கல்வி நிறுவனங்களில் இணையவழி கல்வி – யுஜிசி அனுமதி!!

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தமிழகத்தில் உள்ள 11 கல்வி நிறுவனங்களுக்கு இணையவழி கல்வி வழங்க அனுமதி வழங்கியுள்ளது.

இணையவழி கல்வி:

கொரானா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி பல்வேறு ‘கல்விச் சீர்திருத்தங்களை’ மத்திய அரசு செய்து வருகிறது. அதில் மிக முக்கியமானது இணையவழிக் கல்வி திட்டமாகும். தேசிய கல்விக் கொள்கையை ஒட்டி மே மாதம் பேசிய பிரதமர் மோடி இணையவழிக் கல்வி, இந்த கல்விக் கொள்கையின் மையமாக இருக்கும் என்றும் இணையவழிக் கல்வி, கல்வியின் தரத்தை மேம்படுத்துவதோடு இந்தியாவின் கல்வியை உலகத்தரத்திற்கு மேம்படுத்தும் என்று தெரிவித்தார்.

TN Job “FB  Group” Join Now

நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் ‘நாக்’ அங்கீகாரம் அல்லது தேசிய தரவரிசை பட்டியலில் (என்ஐஆர்எப்) முன்னணியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி இணையவழியில் கல்வி பயிற்றுவிக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி 2021 ஆம் ஆண்டு இணையவழி திட்டத்தின் கீழ் 37 கல்வி நிறுவனங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கல்விக்கடன் ரத்து – திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!!

இதில் தமிழகத்தில் உள்ள 11 கல்வி நிறுவனங்களுக்கு இணையவழி கல்வி நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு முதுநிலை படிப்புக்கும், பாரதிதாசன் பல்கலையில் 11 படிப்புகளுக்கும், மதுரை காமராஜர் பல்கலையில் 11 படிப்புகளுக்கும், பெரியார் பல்கலையில் 7 படிப்புகளுக்கும், அழகப்பா பல்கலையில் 12 படிப்புகளுக்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர தனியார் கல்வி நிறுவனங்களில் 6 கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!