உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் தமிழகம் திரும்பும் செலவை அரசே ஏற்கும் – முதல்வர் அறிக்கை!!!

0
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் தமிழகம் திரும்பும் செலவை அரசே ஏற்கும் - முதல்வர் அறிக்கை!!!
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் தமிழகம் திரும்பும் செலவை அரசே ஏற்கும் - முதல்வர் அறிக்கை!!!
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் தமிழகம் திரும்பும் செலவை அரசே ஏற்கும் – முதல்வர் அறிக்கை!!!

உக்ரைன் முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வருவதால் வெளிநாட்டு பயணிகள் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். தமிழ்நாட்டு மாணவர்களும் தமிழகம் திரும்ப தேவையான அத்தனை செலவையும் அரசே ஏற்கவுள்ளதாக மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ரஷ்ய தாக்குதல்:

உக்ரைன் தலைநகரான கிவ் உள்பட பல நகரங்களில் ரஷ்யா குண்டு வீசி தாக்குதலை நடத்தி கொண்டிருக்கிறது. இதனால் உக்ரைன் முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் நாட்டில் வசித்துவரும் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். வெளிநாட்டு பயணிகளும் அவர்களது சொந்த நாட்டுக்கு திரும்பி வருகின்றனர். தொழில்முறை கல்வி பயில்வோர் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து உக்ரைன் நாட்டில் வசித்து வருபவர்கள் என தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 5,000 மாணவர்கள் அங்கு தவித்து கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு – அரசு அதிரடி உத்தரவு!

அவர்களை பாதுகாப்பாக தமிழ்நாட்டுக்கே அழைத்துவர பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அதாவது மாவட்ட, மாநில அளவில் மற்றும் புதுடெல்லியில் தொடர்பு அலுவலர்களை நியமனம் செய்து உதவிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று காலை உக்ரைனில் இருந்து 916 மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர்கள் தமிழ்நாடு அரசை நியமிக்கப்பட்டுள்ள தொடர்பு அலுவலர்கள் மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாநகராட்சி கல்விக் குழு உத்தரவு பிறப்பிப்பு!

இந்நிலையில் உக்ரைனில் தவித்து கொண்டிருக்கும் மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாட்டுக்கு திரும்புவதற்கு தேவையான அத்தனை செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ள இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். மேலும் இவர்கள் தொடர்பு கொள்ள தேவையான அத்தனை வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1070, திருமதி ஜெசிந்தா லாசரஸ், இஆப., ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகம் 9445869848 9600023645 9940256444 044-28515288 மின்னஞ்சல் [email protected] <mailto:[email protected]> உக்ரைன் அவசர உதவி மையம் தமிழ்நாடு பொதிகை இல்லம்,  புதுடெல்லி. வாட்ஸ்அப் எண் 9289516716 மின்னஞ்சல்  [email protected] இவற்றை பயன்படுத்தி தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!