தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அச்சம் – முதல்வருடன் தலைமை செயலர் சந்திப்பு!!

1
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அச்சம் - முதல்வருடன் தலைமை செயலர் சந்திப்பு!!
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அச்சம் - முதல்வருடன் தலைமை செயலர் சந்திப்பு!!
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அச்சம் – முதல்வருடன் தலைமை செயலர் சந்திப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்கிற அச்சம் நிலவி வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேச உள்ளனர்.

தலைமை செயலர் சந்திப்பு:

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்திலும் கடந்த 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோன 2வது அலை வீரியம் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் வருத்தம்!!

கடந்த வருடத்தினை போல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு விட்டால் சிக்கல் அதிகமாகி விடும் என்பதால் புலம்பெயர் தொழிலாளர்கள் இப்போதே சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கி விட்டனர். இதனால் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. மாநிலம் முழுவதும் இதனால் முழு ஊரடங்கு அச்சம் அதிகமாக உள்ளது. இதற்கிடையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவர்கள் இன்று காணொளிக்காட்சி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.

TN Job “FB  Group” Join Now

இதில் தமிழகம் சார்பில் தலைமை செயலை ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக அரசின் செயல்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சந்தித்து பேச உள்ளார்.

தமிழகத்தில் மே 2ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு? பொதுமக்கள் அதிர்ச்சி!

அதில் பிரதமர் மோடி உடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து எடுத்துரைப்பார் என கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அச்சம் நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முதல்வர் உடனான ஆலோசனைக்கு பின்னரே இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Good and timely wise decision by Thiru.Stalin that no more lock down is necessary if people are self disciplined following Government guidelines.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here