தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – பள்ளிக் கல்வித்துறையால் குழப்பம்!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது கூட தெரியாமல் கேள்வித் தாள்களை அனுப்பி வைத்ததால் பள்ளிக் கல்வித்துறையில் குழப்பம் நிலவி உள்ளது.
பொதுத்தேர்வு வினாத்தாள்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்த காரணத்தினால் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் பள்ளிகள் திறந்து 2 மாதங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது.
TN Job “FB
Group” Join Now
இதனால் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் மே மாதம் 3 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என்பதால் அந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு மே மாதம் 31 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு? ஏப்ரல் 25ம் தேதி பிரதமர் உரை!
கொரோனா பரவலால் மீண்டும் தேர்வுகள் முழுவதுமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இத்தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறலாம் என கூறப்படும் நிலையில் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் மாநிலம் முழுவதும் உள்ள 74 கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக் கல்வித்துறையில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மே மாதம் தேர்வுகள் நடைபெறாமல் ஜூன் மாதம் நடைபெறுவதாக இருந்தால் அதுவரை பொதுத்தேர்வு வினாத்தாள்களை பாதுகாப்பது பெரும் சிரமமாகும். மேலும் அந்த அறைகளுக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்.
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் – மே 5 முதல் தொடக்கம்!!
வினாத்தாள்கள் உள்ள அறைகளுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் சுழற்சி முறையில் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கடந்த ஆண்டுகளில் சில மாவட்டங்களில் தேர்வுக்கு முன்னதாக தேர்வு வினாத்தாள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இந்த ஆண்டும் நடைபெறாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exam vandam🙏🙏🙏🙏Naga Onnum padikala…..fail aittana yanku aseegana aidum..plz exam vandam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇