இந்தியாவில் ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு? ஏப்ரல் 25ம் தேதி பிரதமர் உரை!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக அது குறித்து ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெற உள்ள ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள் உரையாற்ற உள்ளார். அதில் ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.
மன் கி பாத்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று 3 முக்கிய குழுக்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதில் முழு ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி பதவி ஏற்ற பின்னர் பொதுமக்களுடன் உரையாற்ற “மன் கி பாத்” என்ற வானொலி நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 90% மக்களிடம் செல்லும் ஊடகமாக வானொலி உள்ளது. இதனால் தொலைக்காட்சியை தவிர்த்து வானொலி மூலமாக மக்களிடம் கலந்துரையாடுகிறார்.
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் – மே 5 முதல் தொடக்கம்!!
நாட்டில் உள்ள பிரச்சனைகளை பற்றி விவாதிக்க ஒவ்வொரு மாதமும் ஞாயிற்று கிழமைகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். இந்நிலையில் தற்போது கொரோனா தாக்கம் வேகமெடுத்து வரும் நிலையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமை (ஏப்ரல் 25) தேதி “மன் கி பாத்” நிகழ்ச்சி காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அதில் ஊரடங்கு குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.