தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, சேலம்‌, திருப்பூர்‌, ஈரோடு, நாமக்கல்‌, கிருஷ்ணகிரி , தர்மபுரி, திண்டுக்கல்‌, தேனி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழை பெய்யக்கூடும்‌.

26.09.2021 முதல்‌ 28.09.2021 வரை: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

GATE 2022 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் – ஐஐடி காரக்பூர் அறிவிப்பு!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌. இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில்‌ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்‌கடல்‌ பகுதிகள்:

24.09.2021 முதல்‌ 26.09.2021 வரை: பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ குமரிக்கடல்‌, தென்மேற்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌கிழக்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ வீசக்கூடும்‌.

27.09.2021, 28.09.2021: பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ குமரிக்கடல்‌, மற்றும்‌ தென்மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அரபிக்கடல் பகுதிகள்:

27.09.2021, 28.09.2021: பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ கேரளா, லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும்‌ தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!